மக்கள் கருத்துக் கோரல் இன்று ஆரம்பம்!
புதிய அரசியல் யாப்பிற்கு பொதுமக்களின் கருத்துகளை கோரும் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பில் அமைந்துள்ள அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்துக் கோரும் செயலகத்தில் பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியுமென அரசியலமைப்பு திருத்தத்திற்கான மக்கள் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை கொழும்பு 2, ஸ்டேப்பல் வீதியின் விசும்பாயவில் அமைந்துள்ள செயலகத்தில் நடத்தப்படவுள்ள இந்த அமர்வின்போது, அரசியல் யாப்பு தொடர்பான தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர 011 2437676 என்ற தொலைபேசி அல்லது 011 2328780 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக அரசியல் யாப்பு தொடர்பான மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவுடன் தொடர்புகொள்ள முடியும். இதேவேளை, முதல்தடவையாக இம்முறை சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் மக்கள் கருத்துக்கள் கேட்டறியப்படுமென பிரதமர் ரணில் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








