Breaking News

முன்னிலை சோசலிச கட்சியின் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு 77 நாட்கள் கடந்துள்ளதாகவும் கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் புதிய அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.