தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராயவுள்ளது?
அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் சிவில் சமூக அமைப்பான தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தி ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான உத்தேச அரசியலமைப்பு யோசனைகளை முன்வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சியில் கூடவுள்ளனர்.
இதன்போது, தமிழ் மக்கள் பேரவை மற்றும் கூட்டமைப்பின் அனுமதியின்றி பேரவையில் பங்களித்துள்ளவர்கள் தொடர்பிலான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








