அடுத்தமாதம் இலங்கை வருகிறார் சுஷ்மா
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்தமாதம் 5 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
வரும் 5ஆம் நாள் கொழும்பு வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும், இந்திய வௌவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் சுஸ்மா சுவராஜ் ,வரும் பெப்ரவரி 6 ஆம் நாள் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் அவர் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.








