Breaking News

மகிந்த – பசில் இரகசிய கலந்துரையாடல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடன் வாரியப்பொலவில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை வாரியப்பொலவில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் டி.பி.ஹேரத் வீட்டில் இந்த இரகசியக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மகிந்த ராஜபக்சவிடம் புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,தாம்,நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாக பதிலளித்தார்.