பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல் - 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!(இரண்டாம் இணைப்பு)
பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தின் உள்ளே நிழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரையும் ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே நடைபெற்ற தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் 4 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல் - ஏழுபேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள பச்சாகான் பல்கலைக்கழகத்தில் புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் ஏழ்வர் உயிரிழந்துள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதில் பேராசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும், மேலும் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் தாக்குதல்தாரிகளில் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவத்தில் பலியானவர்கள் குறித்த தௌிவான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை. இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு, தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் வௌியிட்டுள்ளார்.








