கிரித்தலே இராணுவ முகாம் மூடப்பட்டது
கிரிந்தலையில் உள்ள இராணுவ புலனாய்வுத்தளம், சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இத்தளத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தளத்திலிருந்த சகல ஆவணங்களும் இராணுவ பொலிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணை மற்றும் அதனோடு இணைந்த நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாகவே இந்த தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.








