Breaking News

எதிர்க்கட்சியினர் இல்லாமல் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வட மாகாண சபை உறுப்பினர்களோ பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது அப்போதைய இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் உள்ளிட்ட ஏழிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

குறித்த கைகலப்பினைத் தொடர்ந்து சுமார் ஒன்றறை வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் வட மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் என்பவற்றில் பிரதான எதிர்கட்சியாக இருக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.