Breaking News

ஊட­க­வி­ய­லா­ள­ர்களை நான் அச்­சு­றுத்­த­வில்லை - மறுக்கிறார் ரணில்

நான் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தி­யா­தாக கூறப்­ப­டு­கி­றது. எந்­த­வொரு ஊட­க­வி­ய­லா­ள­ரையும் நான் அச்­சு­றுத்­த­வில்லை. பெயரை மாத்­தி­ரமே கூறினேன். ஊட­கங்கள் எம்.பி.க்களின் பெயர்­களை சுட்­டிக்­காட்ட முடி­யு­மென்றால் ஏன் எமக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயரை சுட்­டிக்­காட்ட முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்­பினார்.

உயர் குலத்­தோரின் பின்னால் திரிந்­த­வர்கள், உண்டு குடித்­த­வர்கள் தொடர்­பிலோ, உயர் குலத்­தோ­ராக இருந்து தற்­போது வீழ்ச்­சி­ய­டைந்து கிடப்போர் பற்­றியோ எமக்கு அக்­கறை கிடை­யாது என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அமர்­வின்­போது அமைச்சு தொடர்­பான அறி­வித்தல் ஒன்றை விடுத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

பிர­தமர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நேற்­றைய (நேற்­று ­முன்­தினம்) எனது உரையின் போது நான் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக இங்கு உரை­யாற்­றிய எம்.பி. ஒருவர் கூறி­யி­ருந்தார். நான் யாரையும் அச்­சு­றுத்­த­வில்லை. ஊட­கங்­களில் வெளியான விட­யங்­களை சுட்­டிக்­காட்­டியே உரை­யாற்­றி­யி­ருந்தேன். பெயர் குறிப்­பிட வேண்­டிய தேவையின் பொருட்டு அதனைச் சுட்­டிக்­காட்­டினேன். ஊட­கங்­க­ளுக்கு எம்.பி.க்களின் பெயர்­களைக் குறிப்­பிட முடி­யு­மானால் ஏன் எமக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களை குறிப்பி முடி­யாது?

ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக நேர­டி­யாக ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இருக்­கின்னர். எனினும் உயர் குலத்தார் என்று கூறி உயர் குலத்தோரிடத்தில் உண்டு குடித்து பின்னால் சென்றவர்கள் தொடர்பில் எமக்கு அக்கறையில்லை. மேலும் உயர்குலத்தோர் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.