Breaking News

கடந்த காலத்து இர­க­சி­யங்­களை வெளியிடுவோம் - மிரட்டுகிறது பொதுபலசேனா

கடந்த காலத்தில் எமக்குத் தெரிந்த இர­க­சி­யங்­களை நாம் பிர­த­ம­ரிடம் தெரி­விக்க தயா­ராக உள்ளோம். பிர­த­மரை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து எமக்கு தெரிந்த உண்­மை­களை தெரி­விக்­கின்றோம். ஆனால் ஞான­சார தேரரை விட்­டு­வி­டுங்கள் என்று பொது­ப­ல­சேனா அமைப்­பினர் கோரினர்.

பிர­த­ம­ருடன் நெருங்­கிய நட்பில் ஞான­சார தேரர் இருந்தார் எனவும் அவ்­வ­மைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஆட்­சியை கைப்­பற்றும் நோக்­கத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்­பினர் எம்­முடன் சந்­திப்­பு­களை மேற்­கொண்­டனர். அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் நோக்­கத்­திலும் எம்­முடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தனர். அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் குடும்­பத்­துடன் ஞான­சார தேர­ருக்கு தொடர்­புகள் உள்­ளது.

தனிப்­பட்ட ரீதியில் இரு­வ­ருக்கும் நல்ல நட்­பு­றவும் உள்­ளது. அவ்­வா­றான நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் தனது உரையின் போது ஞான­சார தேரர் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் மிகவும் வருத்­தத்­துக்­கு­ரி­யது.

அதேபோல் எம்மை அடிப்­ப­டை­வா­திகள் எனவும் பண்­டா­ர­நா­யக்­கவை கொன்ற புத்­த­ரக்­கித தேர­ருக்கு ஞான­சார தேரரை ஒப்­பிட்டு பேசி­ய­மையும் வருத்­த­ம­ளிக்கும் செய­லாகும். எனவே இது தொடர்பில் எமது கண்­ட­னத்தை நாம் தெரி­வித்து கொள்­கின்றோம். மேலும் இந்த நாட்டில் நாம் பெளத்த கொள்­கையின் அடிப்­பை­டயில் தான் செயற்­பட்டு வந்­துள்ளோம். அதேபோல் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் ஆத­ரித்தும் அதே­வேளை நாட்டை பிள­வு­ப­டுத்தும் பிரி­வினை வாதி­க­ளுக்கு எதி­ரா­க­வுமே நாம் செயற்­பட்டோம்.

ஆனால் எம்மை அடிப்­ப­டை­வா­திகள் என்ற அடிப்படையில் சித்­த­ரித்து இந்த நாட்டில் மக்கள் மீது தவ­றான கருத்­துக்­களை புகுத்­தி­விட்­டனர்.

அதேபோல் கடந்த காலத்தில் நாம் சிறி­கொத்த காரி­யா­லயம் மீது அத்­து­மீ­றி படை­யெ­டுத்­த­தாக கூறு­கின்­றனர். ஆனால் இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் பல இர­க­சி­யங்கள் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­பல்­ய­மான ஒரு­வரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­யவே நாம் அங்கு சென்றோம். இந்த இர­க­சி­யங்­களை நாம் பிர­த­ம­ரிடம் தனிப்­பட்ட ரீதியில் தெரி­விக்க தயா­ராக உள்ளோம். அதேபோல் எமக்கு தெரிந்த சில இரகசியங்களையும் தனிப்பட்ட ரீதியில் எம்மால் கூற முடியும். இது யாரையும் காட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. ஆனால் எமக்கு தேவைப்படுவது எல்லாம் எமது ஞானசார தேரர் விடுதலையாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.