Breaking News

பேரவைக்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்தது தமிழரசுக் கட்சி!

தமது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை பரப்பும் கூட்டங்கள் என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி, தேர்தல் தொகுதிகள் தோறும் கூட்டங்களை நடத்தி தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தால் தனிமைப்பட்டுவிட்டதாக எண்ணும் தமிழரசுக் கட்சி, பருத்தித்துறை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலேயே இவ்வாறான கூட்டங்களை நடாத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கூட்டங்களை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்களே ஒழுங்குபடுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.