மீள்குடியேற்றம் தொடர்பான ஜனாதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கது - சுமந்திரன்
இராணுவ பயன்பாட்டிலுள்ள மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற குழுவின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள செவ்வியில் இன்னும் ஆறு மாதங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழ்ந்து வாழுகின்ற சுமார் 1 லட்சம் பேர் மீள குடியமர்தப்படுவர் என தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் குறித்த கருத்தினை வரவேற்றுள்ள இலங்கையின் பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்தமிரன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முகாம்களில் வாழுகின்ற மக்களை மீள குடியமர்வது தொடர்பில் ஜனாதிபதியினால் முதன் முறையாக காலவரையரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.இதனை நாங்கள் வரவேற்கின்ற அதேவேளை, இராணுவ பாவனையிலுள்ள தனியார் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு அவை உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.








