Breaking News

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி! பிரதமர் ரணில்

புதிய வருடத்தில் அனைத்து மக்களுக்கும் உள்ள பிரச்சினைகள் தீர்த்து வைப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு கிழக்கு மீளக்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.