சீனாவுடன் உறவை வலுப்படுத்த இலங்கை விருப்பம்
சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புவதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஆண்டு பீஜீங் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி சின்ஹூவா செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது, பல்வேறு முக்கிய பரப்புகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும், இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.