Breaking News

ஜெனிவா தீர்மானம் குறித்து சம்பந்தனுடன் ரொனி பிளேயர் ஆலோசனை

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்தே இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலின்போது வடக்கு கிழக்கின் மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்புதல் மற்றும் காணாமற்போனோர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த அவர் இன்றைய தினம் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.மேலும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் டொனி பிளேயர் கரிசனை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.