Breaking News

ஜனவரி 8, சத்தியாகிரகப் போராட்டத்தில் குதிக்கவுள்ள “துறவிகள் குரல் அமைப்பு”

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த எண்ணியிருப்பதாக துறவிகள் குரல் அமைப்பின் தலைவரும் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதியுமான முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.பௌத்த பிக்குகள் என்ற வகையில் ஒரு வருடம் பொறுத்துக்கொண்டோம். ஒரு வருடம் அமைதியாக இருந்தோம். அரசாங்கம் துரோக வேலைகளை செய்து வருகின்றது. இதனால், அதற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அபயராம விகாராதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.