மரணத்தண்டனையை நீக்கக்கோரி ஜனாதிபதியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை
இலங்கையில் மரண தண்டனையை நீக்கக்கோரி யோசனை அடங்கலான கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.
மனித உரிமையின் அடிப்படை மற்றும் பெறுமதிக்கு பொருத்தமான வகையிலான மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








