தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவளிக்கத் தயார்!
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் சட்சியாக உருவாகினால் அதற்கு பூரண அளவில் ஆதரவளிக்கத் தயார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டால் அதற்கு ஆதவரளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இதுவரையில் திருப்திகரமான நிலைமை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அரசியல் சாசனம் குறித்த தமிழ் மக்கள் பேரவயின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே என அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








