Breaking News

வலி.வடக்கில் இரகசிய சித்திரவதை முகாம் இல்லை!

வலி.வடக்கு வீமம்காமம் பகுதியில் இராணுவ சித்திரவதை முகாம் எதுவும் இல்லை என இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்ட வீமம்காமம் பகுதியில், இரு வீடுகள் இராணுவத்தினரின் சித்திரவதை கூடமாக இயங்கி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, இராணுவ ஊடக பேச்சாளர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இராணுவத்தினர் இரகசிய முகாம்களையோ, சித்திரவதை முகாம்களையோ நடத்தவில்லை. அவ்வாறாக முகாம்களை நடாத்த வேண்டிய தேவை இராணுவத்தினருக்கு இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.