Breaking News

வெற்றியை தக்கவைக்குமா இலங்கை அணி?

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

மேற்படி களமிறங்கிய நியூசிலாந்து சார்பில் மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 102 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் ரெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து அணி 295 ஓட்டங்களை விளாசியது.

இதனையடுத்து தற்போது இலங்கை வெற்றி இலக்கை நோக்கிய தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.