மைத்திரியை வீழ்த்த தாமரை பூவில் வியூகம் அமைக்கும் மகிந்த!
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புதிய கட்சி ஒன்றின் மூலம் களமிறங்க நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
மகிந்தவுக்கு நெருக்கமான குழுவினர் புதிய கட்சி ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இதனூடாக மகிந்த போட்டியிட திட்டமிட்டுள்ளார்.“எங்கள் சுதந்திர முன்னணி” என்ற பெயரில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக்சவின் தமைமையில் அந்த கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார நடவடிக்கையின் போது தாமரை சின்னத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரப்பட்ட போதிலும் தாமரை பூ தேசிய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதனால் அதனை சின்னமாக வழங்க முடியாதென நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதன் இதழ்கள் சிலவற்றை நீக்கி விட்டு தாமரை மொட்டினை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் இணக்கம் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் இந்த கட்சியின் பெயர் எதிர்வரும் காலங்களில் மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை புதிய கட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு பசில் ராஜபக்ச மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் அறக்கட்டளை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் வீட்டில் இது தொடர்பில் பல கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த நடவடிக்கைக்கு கோத்தபாய மற்றும் மகிந்த எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.எனினும், கடந்த வியாழக்கிழமை கண்டியில் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச, மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டிய நிலைய உருவாகியுள்ளதாகவும் புதிய கட்சி ஒன்றினை உருவாக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் புதிய கட்சியின் நடவடிக்கைகளுக்காக மகிந்த ராஜபக்ச ஒரு போதும் கலந்துகொள்வதற்கு தீர்மானிக்கவில்லை.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ராஜபக்சர்களை அரசியலில் இருந்து ஒருபோதும் துரத்த முடியாதென அண்மையில் பசில் ராஜபக்ச சிங்கள செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.