Breaking News

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினம் இன்று

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 9 தமிழர்களின் 42ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாகவுள்ள நினைவிடத்தில் நினைவுகூரப்பட்டது.

1974ம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் தாக்குதலில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.இவர்களின் 42ம் ஆண்டு நினைவு நாளே இன்று அனுட்டிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.