மஹிந்த – புலிகள் தொடர்பு! வாய் திறக்கும் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ராஜபக்ஷவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பல தகவல்களை வெளியிட முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தயாராகி வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் இரகசியமான முறையில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தது.
இவ்வாறு நிதி வழங்கியே 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ வெற்றி வெற்றதாக பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, ராஜபக்சவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் சம்பந்தமாக இதுவரை வெளியிடப்படாத பல உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.