இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை! அடித்து கூறுகிறார் மஹிந்த
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கம்பஹா, பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கடந்த கால ஆட்சியின் போது, இனவாதம் தலைத்தூக்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அளுத்கமையிலும், தம்புள்ளை உட்பட கொழும்பிலும் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகள் இடம்பெற்றதுடன், பள்ளிவாயல்கள் மீதும் தாக்குதலகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், பூகொடையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பின்போது, தான் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.