லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை ஆவணங்கள் அழிப்பு
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்த விசாரணை தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் குறித்த படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கையின் சில பக்கங்களை அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய நபர்கள் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களே அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடங்கிய குற்றப் புலனாய்வு புத்தகத்தின் (CIB) சில பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த பக்கங்கள் அகற்றப்பட்டுள்ள விடயம் தெரியவந்ததை அடுத்து தற்போது புதிதாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.