Breaking News

பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் தெரியப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு - தாண்டவன்வெளி வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள், அரசியல் தலைவர்கள், ஆர்வமுடையவர்கள், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் கடந்த வருட இறுதியில் உருவாக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீவு காணும் முகமாக உருவாக்கப்பட்டதாகவும், இது ஒரு அரசியல் கட்சியல்ல அமைப்பு எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார்.

உப குழு தயாரித்த அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.