சுஸ்மா - மைத்திரி சந்திப்பு
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை, ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஒன்பதாவது இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தின் பெறுபேறுகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எடுத்துக் கூறினார்.அத்துடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும், பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்களில், இந்திய, இலங்கை வெளிவிவகாரச் செயலர்களும், கொழும்புக்கான இந்தியத் தூதுவரும், ஜனாதிபதியின் செயலரும் கலந்து கொண்டனர்.அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று மதியம் 12 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.








