உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தும் தீர்மானமும் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடையே கருத்து தெரிவித்த போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும் பின்னர் ஜுன் மாதம் வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கெதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.இது தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் வினவியுள்ளனர்.இதற்கு பதிலளித்த பிரதமர், இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பித்தில் இத்தேர்தலை நடத்த தீர்மானித்திருப்பதாக கூறியுள்ளார்.








