Breaking News

எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் முடி­வுற்ற பின்னரே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்!

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முன்­னிட்டு 1000 இற்கும் அதி­க­மான தேர்தல் வட்­டா­ரங்­களில் திருத்தம் மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் அவற்றில் முழு­மை­யான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெ­று­மென உள்­ளூ­ராட்சி மகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

பிர­தமர் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு கால­தா­ம­த­மாகும் என்று குறிப்­பி­ட்டி­ருந்­தாலும் எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் முற்றுப் பெற்­றதன் பின்னர் எவ்­வித கால­தா­ம­தமும் இன்றி தேர்தல் நடத்தப்­படும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் கால­தா­மதம் ஆகின்ற நிலையில் இது தொடர்­பி­லான போலி­யான பிர­சா­ரங்கள் பல நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.இந்­நி­லையில் தற்­போது எல்லை நிர்­ணய பணிகள் துரித கதியில் இடம்­பெற்று வரு­கின்­றன.

வரும் தேர்­தலை முன்­னிட்டு 1000 இற்கும் அதி­க­மான தேர்தல் வட்­டா­ரங்­களில் தற்­போது திருத்தம் செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.அதனால் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் எல்லைப் பகுப்பு பணிகள் முற்­றுப்­பெறும் வரையில் உள்­ளு­ராட்சி மன்ற தேர்தல் இடம் பெறாது.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்தல் இவ்­வ­ரு­டத்தில் இடம்­பெ­று­வது கடினம் என்று குறிப்­பிட்­டுள்ளார். அவர் ஐக்­கிய தேசிய கட்சி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தோல்­வியை தழு­வப்­போ­வ­தா­லேயே அவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

பிர­தமர் நாம் எல்லை நிர்­ணயப் பணி­களை நிறைவுசெய்ய கால­தா­மதம் ஆகும் என்ற நோக்­கி­லேயே தேர்தல் இடம்­பெ­றாது என்று தெரி­வித்­துள்ளார்.எவ்­வா­றி­ருப்­பினும் துரி­த­மாக எல்லை நிர்­ணயப் பணி­களை நிறைவுசெய்த பின்னர் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­யாக தேர்தல் நடை­பெறும் என்ற நிலைப்­பாட்டில் மாற்றம் இல்லை.

மறு­புறம் எல்லை நிர்­ணயப் பணி­களின் போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை வெற்றி பெற­வைக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவை உண்­மைக்குப் புறம்­பான விட­யங்கள் .நீதி­யான முறையில் எல்லை பகுப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்த தேர்தல் முறையில் பிர­தான இரு கட்­சி­க­ளுக்கும் வெற்றிவாய்­ப்புக்கள் அதிகம் இ­ருந்­தாலும் வடக்கு உள்­ளிட்ட பகு­தி­களில் அங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்­சிகள் வெற்­றி­பெறும் வாய்ப்பு அதிகம் உள்­ளது. அதனால் புதிய தேர்தல் முறைமை சிறிய கட்­சி­க­ளுக்கு பாத­க­மாக அமையும் என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத குற்­றச்­சாட்டு.

அதேபோல் சுதந்­திரக்கட்­சியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிள­வு­ப­டுத்­தி­விட்டார் என்ற போலி­யான பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவையும் பொய்­யான குற்­றச்­சா­ட்­டுக்­களே.

இவ்­வாறு பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­தாலும் புதிய கட்சி களை உருவாக்கி சுதந்திரக்கட்சியை உடைக்கப் பார்ப்பதும் சாத்தியப்படாத செயற்பாடுகள். எமது எதிர்பார்ப்புக்கள் சுதந்திரக் கட்சியை உடைப்பதல்ல. அதற்கு மாறாக சுதந்திரக் கட்சியின் பிரதேச மட்டத்திலான அரசியலை வலுப்படுத்த பிரதேசசபைகளில் 30 சதவீதமாக பெண் பிரதிநிதித் துவத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.