Breaking News

கைதிகளை பாதாள உலக கும்பல்களை வழிநடத்துகின்றனர் - சுவாமிநாதன் குற்றச்சாட்டு

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், சிறைகளில் இருந்து பாதாள உலக குழுக்களை வழிநடத்தும் குற்றவாளிகளுக்கு உதவி செய்யும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சில கைதிகள், சிறைச்சாலைக்குள் இருந்தபடியே பாதாள உலக கும்பல்களை இயக்குவதாக சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைதிகள் இவ்வாறு செயற்படுவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் பலர் பலவகையிலும் உதவிளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்இ சிறைச்சாலை அதிகாரிகளை ஒரே இடத்தில் வேலைக்கு அமர்த்தாமல் ஒவ்வொரு சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்வாறான குற்றவாளிகளுக்கு உதவியளிக்கும் சிறைச்சாலை அதிகாரிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.