Breaking News

ஆட்டம் போட்டால் அடக்கி விடுவேன்! -எச்சரிக்கிறார் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மகிந்த தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்களேயானால் அவர்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து வெளியே எடுப்பேன் அதன் பின்னர் ராஜபக்­சவினர்களால் இந்த நாட்டில் வாழவே முடியாது போகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஜனாதிபதி கூறுகையில்,

உண்மையாக கூறினால் நான் கட்சியை விட்டு செல்வதற்கு பாதையை அமைத்தது ராஜபக்சர்கள் தான், எனினும் நான் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மகிந்த புதிய கட்சியை உருவாக்கி சுதந்திர கட்சியை பிளவுபடுத்தினால் என்னிடம் இருந்து விடுதலை கிடையாது. என்னிடம் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் உள்ளன.

ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வெளியே எடுப்பேன். அதன் பின்னர் மக்கள் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்வர். அதன் பின்னர் ராஜபக்ஷர்களினால் இந்த நாட்டில் வாழ முடியாது. எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் பொது எதிரணியினரின் எதிர்ப்பு பேரணியையும் தான் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்