மகிந்தவுடன் கூட்டு சேரும் சோமவன்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கொழும்பு – ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி மக்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இதில் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதோடு, மஹிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கலந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த அறிவிப்பையும் மீறி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இக்கூட்டத்தை நடத்துதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த நிலையிலேயே சோமவன்ச அமரசிங்கவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.