அம்மாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த சிறுமி!
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் சுலக்ஷனாவின் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி நேற்று(திங்கட்கிழமை) காலை கல்முனையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட சுலக்ஷனாவின் மகள் தனது அம்மாவின் கொலைக்கு நீதி கோரி களத்தில் குதித்த சம்பவம் அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது டயர்கள் எரிக்கப்பட்டதுடன், கொலையை ஒப்புக் கொண்ட கொலையாளி சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி அனுசரணை வழங்கக் கூடாது என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை கொடு, அல்லது எங்களிடம் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் சுலக்ஷனாவின் மகள் தனது அம்மாவின் கொலைக்கு நீதி கோரி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் விஷேட மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தார்.