இலங்கைக்கு ஆதரவாக இரண்டு திட்டங்கள்- ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் தெரிவிப்பு
இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளைக் கைச்சாதிடவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின், அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வந்துள்ள அவர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் பின்னரே அவர், இலங்கைக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவிகளுக்குப் பொறுப்பானவரானவராக, நிவென் மிமிகா பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.இவர், இலங்கையில் தங்கியிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.