ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் தானும் கலந்து கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.