அரசியல் கைதிகளுக்கு சார்பாக நாளை யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நாளை திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன.
இதில் வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி மெகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை 14ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதை அவர்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








