Breaking News

ஜனாதிபதி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் சர்வதேச ஒப்பந்தம்?

மிதிவெடிகளை தடை செய்வது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்திற்கு, இலங்கையின் உடன்பாட்டை அரசாங்க தரப்பிலுள்ள முக்கிய நபர் ஒருவர் ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமோ, பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமோ கலந்தாலோசனை செய்யாமல் இந்த உடன்பாட்டை இலங்கை அறிவித்துள்ளதாக அரசியல் உயர் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் ஜனாதிபதி விசாரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர், இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்காக மிதி வெடிகளை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகின்றது.

இருப்பினும், இது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இதுவரையில் இலங்கை கைச்சாத்திடவில்லையெனவும், விருப்பத்தை மாத்திரமே தெரிவித்துள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் கூறியுள்ளன.