கிணற்றுக்குள் வீழ்ந்து தாயும் மகளும் பலி
கிணற்றுக்குள் வீழ்ந்து தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பதற்றத்தில் சென்ற தாயும், அங்கு தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரணங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.