தமிழினியின் சுயசரிதத்தை வெளியிடுவதில் சிக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக கடமையாற்றி அண்மையில் காலமான தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் சுயசரிதத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுயசரிதமொன்றை தமிழினி உயிருடன் இருந்த காலத்தில் எழுதியிருந்தார் எனவும் அதனை பிரசூரிக்க தாம் எடுத்த முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த நூல் எதிர்வரும் 19ம் திகதி பிரசூரிக்கப்படவிருந்தது.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்விற்கு அனுமதி பெற்றுக்கொள்ள கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அட்டைப் படத்தில் தமிழினி புலிகளின் சீருடை அணிந்திருந்தார் எனவும், புலிக் கொடி காணப்படுவதாகவும் இவற்றை அகற்றிக்கொண்டால் நூல் வெளியீட்டுக்கு அனுமதியளிக்கப்படம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட ரீதியான அடிப்படையில் அச்சிடப்பட்ட நூலை வெளியிட அனுமதியளிக்காமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழினியின் கணவர் தெரிவித்துள்ளார்