Breaking News

தெஹிவளையிலுள்ள வீடொன்றிருந்து நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு

தெஹிவளை கவுடான வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து, உடல் கருகிய நிலையில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலங்கள், 64 வயதான தந்தை, 52 வயதான தாய், 13 வயதான மகள் மற்றும் 13 வயதான உறவுமுறை சிறுமியொருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கியதில் இவர்கள் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. மூன்று மாடி கட்டிடமொன்றில் இவர்கள் வசித்து வந்த நிலையில், வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தே, இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்