தகவல் அறியும் சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்துக்கு
தகவல்களை அறிந்து கொள்வதற்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த சட்ட மூலம் முன்வைக்கப்படவுள்ளது. இச்சட்டமூலமானது முதலாவது வாசிப்பின் பின்னர் வேறு ஒரு தினத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலமானது இதுவரையில் சகல மாகாணங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








