Breaking News

பேரவையின் தீர்வுத் திட்ட முன்வரைபு - கொழும்பு வாழ் தமிழ்மக்களுடனான சந்திப்பு இன்று

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றி வரும் இவ்வேளையில், ஈழத்தமிழ்மக்களின் உரிமை விடயத்தில் கொழும்புவாழ் எம்மக்களின் வகிபங்குமிகவும் அவசியமானது.

எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் மக்கள் சந்திப்பு கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

இக் கருத்தறியும் நிகழ்வில் தமிழ்மக்கள் அனைவரையும் வருகை தந்து தமது கருத்துக்களை பகிரும்படி தமிழ்மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இதேவேளை, மிக விரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவு முழுமையாகத் தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 31 மார்ச் 2016 ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் politicalsub@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 94 75 6993211 என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பிவைக்கும் படியும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.