வடக்குக்கான நல்லிணக்க பயணம் இன்று ஆரம்பம்
தெற்கு ஊடகவியலாளர்களையும் வடபகுதி ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமாகிறது. வெகுஜன ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழு இன்று யாழ். நகர் நோக்கிப் புறப்படவுள்ளது.
‘பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயணத்தில் தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கும், வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கான கலாசார நிகழ்வுகள், சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.








