Breaking News

விக்னேஸ்வரனுக்கு எதிராக மாவை தலைமையில் இரகசியக் கூட்டம்!

வடக்கு மாகாண சபையில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான இரகசியக் கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் யாழ்.மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

மிகவும் இரகசியமான முறையில் பூட்டிய அறைக்குள் நடந்த இக் கூட்டத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனுக்கு எதிராக சதித்திட்டம் தீட் டப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இது குறித்து கட்சித் தலைமை ஊடகங்களுக்கு தகவல் கொடுக்க மறுத்துவிட்டது.

நேற்றுக்காலை நடந்த இந்த இரகசியக் கூட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடக்கு மாகாண முதலமைச் சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகவும், அவரை பதவி கவிழ்ப் பதற்காகவும் பலதரப்பட்ட சதித் திட்டங்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தாலும் கூட, அவற்றில் மூன்று முயற்சிகள் பகிரங்கமாக எல்லோர் மத்தியில் பேசப்பட்டிருந் தன.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயற்சித்தமை, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று போலிக்கையெழுத்துகள் பெறப் பட்டமை, அமைச்சர் ஐங்கர நேசனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஊழல் மோசடி பிரேரணை.

இவை அனைத்தும் படுதோல்வியில் முடிவடைந்துள்ள நிலை யில், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேசுவதற்காக மாவை தலைமை யில் நேற்று இந்த கூட்டம் கூடியுள் ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கூட்டத்தின் நோக்கம் ‘இன் றைய அரசியல் நிலைமையும், தீர்வுத் திட்டமும்’ என்று தலைப்பிட்டு உறுப் பினர்களுக்கு அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், வடக்கு மாகாணசபையை கலைப்பது அல்லது முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது என்று தொடரும் போக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை களுக்கு தயார்ப்படுத்தும் கூட்டமாகவே இதனை தான் நோக்குவதாக தமிழரசுக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத வடக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இவ்வாறான போக்குகள் தொடருமாயின் அது தமிழ் தேசியக்கூட்ட மைப்பை சிதைத்து இரண்டாகப் பிளவுறுத்தும் ஆபத்தான நிலைமைகளுக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். 

கடந்தவாரம் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் இரகசிய சந்திப்பு ஒன்றை கூட்டி சதித்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய அவரசர கூட்டமும் நோக்கப் படுகின்றது. 

எனினும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். என மற்றொரு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார். இதே வேளை வடக்கு மாகாண சபை யின் கடந்த அமர்வின் போது உறுப்பினர்களிடையே காணப் பட்ட கசப்புணர்வுகள் முடிவுக் கொண்டு கொண்டுவரப்பட்டிருந்தன.

எனினும் மேற்படி அமர்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் லிங்கநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் சபையில் ஏற்படும் குழப்பங்கள் தொடர்பிலும் நேற்றைய கூட்டதில் ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.