பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்
பிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45. மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ஜெமினி, மழை, வேல், ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் பொலிசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று திடீரென்று சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி உயிர் பிரிந்தது. இவரது மறைவு சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.








