Breaking News

29 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் ஒரு ட்ரோலர் படகுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

அத்துடன் மேலும் 3 சிறுமீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் தென்பகுதியில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.