அரசாங்கத்திற்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பாரிய பேரணி
ஐக்கிய தேசிய கட்சியினர், நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யாமல் மற்றவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐந்து விடங்களை பிரதானமாக முன்வைத்து நாளை பேரணி நடைபெறவுள்ளது. இது முக்கியமானதாகும்.
இந்த அரசாங்கம் பெற்றோலின் சலுகையை மக்களுக்கு வழங்க கூடிய வாய்ப்பிருந்தும், அதை மக்களுக்கு வழங்காமல் இந்தியாவுக்கு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2001, 2002 ஆம் ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் சிறந்த வருமானம் பெற்றுத்தரும் 175 பெற்றோல் விநியோக நிலையங்களை இந்தியாவின் IOC க்கு வழங்கினார்.
IOC நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 1.1 பில்லியனை ரூபாவை வருமானமாக பெறுகின்றது. இந்த வருமானத்தில் 50%த்தை நாட்டின் ஒரு முக்கியமான அரசியல்வாதியின் கையில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சேவை வழங்காமல் இந்தியாவுக்கே சேவையாற்றுகின்றது.
நாம் அதிகமாக கடன் பெற்றதாக, சமகால அரசாங்கம் எம்மீது குற்றம் சாட்டுகிறது. ஆனால் தற்போது இவர்கள் கடன் வாங்கவில்லையா என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.