Breaking News

பலாலி விமான நிலையத்தை பார்வையிட இந்தியக்குழு நாளை விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐவர் அடங்கிய இந்தியக் குழுவினர் நாளை வியாழக்கிழமை பலாலி விமான நிலையத்திற்கு செல்லவுள்ளதாக இந்திய உயர்ஸ் தானிகராலயத்தின் ஊடகசெயலாளர் ஈஷா ஸ்ரீவாஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு தொடர்ந்து இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று விஜயம் மேற்கொண்டிருக்கும் குறித்த குழுவினர் இன்று புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்தானிகராலயத்தில் பலாலி விமான நிலைய புனரமைப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.