Breaking News

அரசை தூக்கிவாரிப் போட்ட மின்துண்டிப்பு கோளாறா? நாசகாரமா?

நாட்டின் பிர­தான வளங்­க­ளிலும் மனித அன்­றாடத் தேவை­க­ளிலும் நீர் மற்றும் மின்­சாரம் போன்­றவை தற்­போது முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. ஆரம்ப காலங்­களில் மின்­சாரத்தில் துணை­யின்றி இலங்­கையில் மக்கள் வாழ்ந்­தாலும், தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. மனி­த­னுக்கு அன்­றாட வாழ்க்­கையில் அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்த தொன்­றாக மின்­சாரம் மாறி­யுள்­ளது. சாதா­ரண தொலை­பேசி முதல் விண்­வெ­ளிக்கு அனுப்பும் விண்­கல செயற்­பா­டுகள் வரைக்கும் மின்­சாரம் இல்­லாமல் எதனையும் சாதிக்க முடி­யாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


இலங்­கையில் 2020 ஆம் ஆண்­ட­ளவில் 99 சத­வீத மின்சார தேவைகள் பூர்த்தி செய்­யப்­படும் என்று கூறப்­பட்­டாலும் இலங்­கை தற்­போது முகங்­கொ­டுத்­துள்ள நிலைமை அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தும் விட­ய­மாக மாறி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான ஆட்­சியில் அனைத்துத் துறை­க­ளிலும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இது ஒரு­பு­ற­மி­ருந்­தாலும் கடந்த ஆறு மாதங்­களில் மூன்று தடவைகள் நாடு­த­ழு­விய ரீதியில் மின்­வி­நியோம் தடைப்­பட்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் மாத்திரம் இரண்டு தட­வைகள் மின் விநியோகம் தடைப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மூன்று துண்­டிப்­பு­க­ளிலும் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்திய மின் துண்­டிப்­பாக 13 ஆம் திக­தி சம்­ப­வத்தை குறிப்­பி­டலாம்.

இத்­த­கைய மின்­வி­நி­யோகத் தடை­க­ளுக்கு பல காரணம் கூறப்­பட்­டாலும் ஒரு சில காரணங்கள் அனை­வ­ரி­னதும் அவ­தா­னத்­திற்கும் உள்­ளா­கி­யுள்­ளன. சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் கூட கூடுதல் அவ­தா­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்ள கார­ண­மாக அமைந்­துள்­ளதென லாம். அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை திசை­தி­ருப்பும் வகையில் முன்­னெ­டுக்­கப்­படும் 'சூழ்ச்சி' என்­பதே அந்த கார­ண­மாகும். என்ன கார­ண­மாக இருந்­தாலும் இறு­தி­யில அனைத்­திலும் 'இரு­த­லை­கொள்ளி' என்ற பதத்­திற்கு உரி­ய­வர்­க­ளாக மக்­களின் நிலைமை மாறி­யுள்­ளது.

அர­சியல் என்ற வட்­டா­ரத்தில் மக்கள் தினமும் வலைக்குள் சிக்­குண்ட மீன்­போன்று துடிக்­கின்­றனர். பாரா­ளு­மன்றம் முதல் அரச நிர்­வாகம் வரை அர­சியல் என்­பது தற்­போ­தைக்கு பெரும் தொல்­லை­யாக மாறி வரு­கின்­றது. இதன்­படி புதிய ஆட்சி மலர்ந்த பிறகு முதற்­த­ட­வை­யாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நள்­ளி­ரவில் மின்­துண்­டிப்பு ஏற்­பட்­டது. அத­னை­தொ­டர்ந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நாடு­மு­ழு­வதும் மின்­துண்­டிக்­கப்­பட்­டது. ல­க் ஷ­பான நீர்­மின்­நி­லை­யத்தில் மின்னல் தாக்­கு­தலின் கார­ண­மாக ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே குறித்த மின்­துண்­டிப்­பதற்கு கார­ண­மாகும் என அர­சாங்கம் குறிப்­பிட்­டது.

இருந்­த­போ­திலும் கடந்த ஞாயிற்றுக்கிழ­மை­யன்று ஏற்­பட்ட நாடு­த­ழு­விய மின் துண்­டிப்­பா­னது 1996 ஆம் ஆண்­டுக்குப் பிறகு ஏற்­பட்ட பார­தூ­ர­மான மின் துண்­டிப்­பாக கூறப்­பட்­டது. சுமார் எட்டு மணித்­தி­யாலம் இலங்கை முழு­வதும் இருளில் மூழ்­கு­வது என்­பது சாதா­ரண விட­ய­மாகக் கரு­த­மு­டி­யாது. மூன்­றா­வது மின்­துண்­டிப்பு நாட்டு மக்­களை மாத்­திரம் அவ­திக்­குட்­ப­டுத்­த­வில்லை. அர­சாங்­கத்­தையும் தூக்கி வாரிப் போட்­டுள்ளது. அமைச்­ச­ர்கள் அதி­கா­ரிகள் என அனைவரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

எட்டு மணி­நேர மின்­தடை

நாடு­பூ­ரா­கவும் சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் திடீ­ரென மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­டது. இத­னை­தொ­டர்ந்து சில இடங்­களில் மாலை 5 மணி­ய­ளவில் விநி­யோகம் வழ­மைக்குத் திரும்­பி­யது. இருப்­பினும் பெரும்­பா­லான இடங்­களில் இரவு 7 மணிக்கு வழ­மைக்கு திரும்­பி­னாலும் மீளவும் நாடு முழு­வ­திலும் மின் விநி­யோகம் தடைப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இரவு 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை­யி­ல் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் மின் விநி­யோகம் வழ­மைக்குத் திரும்­பி­யி­ருந்­தது.

மின்­சார சபையின் விளக்கம்

இது தொடர்பில் மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க அமைச்சின் செய­லா­ள­ரிடம் வின­விய போது, பிய­கம பிர­தே­சத்­தி­லுள்ள உப மின்­நி­லை­யத்தில் ஏற்­பட்ட மின்­மாற்றி வெடித்துச் சித­றி­ய­தனால் மின் துண்­டிப்பு ஏற்­பட்­டது. எனினும் மூன்று அல்­லது நான்கு நாட்­க­ளுக்கு மின்­வி­நி­யோ­கத்தில் சிக்கல் நிலைமை ஏற்­படும் என்றார்.

ஆகவே இந்த வாரம் முழு­வதும் நாட்டின் பல பாகங்­களின் மின்­வி­நி­யோ­கத்தில் பெரும் பாதிப்­புக்கள் ஏற்­படும். இதன்­படி ஒரு நாளைக்கு மூன்று தட­வைகள் விநி­யோகம் தடைப்­படும் என்று மின்­சார சபை விளக்கம் கூறி­யுள்­ளது. இதன்­படி நுரை­ச்சோலை அனல் மின்­ நி­லையம் ஸ்தம்­பிதம் அடைந்­த­மை­யினால் மின்­வி­நி­யோகக் கட்­ட­மைப்பில் 900 மெகா வோட் மின்னிணைப்பு கிடைக்­காமல் போவ­தாக மின்­சார சபை கூறு­கி­றது. இதனால் 400 மெகாவோட் கொண்டு முகா­மைத்­து­வப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது

நீர் விநி­யோ­கமும் தடை

இதே­வேளை நாடு­பூ­ரா­கவும் மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­ட­மை­யினால் பல்­வேறு பகு­தி­களின் நீர் விநி­யோ­கமும் தடைப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக மாத்­தறை , கொழும்பு மற்றும் புற­நகர் பகு­திகள், நுவ­ரெ­லியா போன்ற இடங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டது. அத்­துடன் மின்­வி­நி­யோ­கத்தின் தடை­கா­ர­ண­மாக அம்­பத்­தலை மற்றும் பிய­கம நீர்­சுத்­த­க­ரிப்பு நிலை­யங்­களின் செயற்­பா­டுகள் முழு­மை­யாக பாதிப்­ப­டைந்­தி­ருந்­தன. ஆகையால் குறிப்­பிட்ட தினங்­க­ளுக்கு நீரை சேமிக்­கு­மாறு அர­சாங்கம் கோரி­யுள்­ளது.

அன்­றாட வாழ்க்­கையில் ஏற்­பட்ட பாதிப்­புகள்

அத்­துடன் மின்­வி­நி­யோகத் தடை­கா­ர­ண­மாக வீதி சமிக்ஞை விளக்­குகள் துண்­டிக்­கப்­பட்­ட­மை­யினால் கொழும்பு , கண்டி உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களில் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டது. மேலும் ரயில் சேவை­களும் ஸ்தம்­பிதமடைந்த காணப்­பட்­டன. இதன்­ கா­ர­ண­மாக பய­ணிகள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

இதே­வேளை அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல், பதுளை, நுவ­ரெ­லியா உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களின் பிர­தான வைத்­தி­ய­சா­லை­களில் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­ட­மை­யினால் நோயா­ளி­களும் பெரும் அசௌ­க­ரி­யங்கள் எதிர்­கொண்­டனர். வைத்­தி­ய­சா­லை­களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கொழும்பு, கண்டி மற்றும் காலி உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களில் ஹோட்­டல்­கல்பெற்றோல் நிலை­யங்கள் மாலை பொழுதில் மூடப்­பட்­ட­மை­யினால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டது.

தலை­வரின் இரா­ஜி­னாமா நிரா­க­ரிப்பு

நாடு­பூ­ரா­கவும் ஆறு­மா­தங்­களில் இது­வரை மூன்று தட­வைகள் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் நேற்று பாரிய மின்­துண்­டிப்பு ஏற்­பட்­ட­தனை அடுத்து இலங்கை மின்­சார சபையின் தலைவர் அநுர விஜ­ய­பால தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­ததுடன் திங்­க­ளன்று அதற்­கான இரா­ஜி­னாமாக் கடி­தத்தை அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தி­ருந்தார். இருந்­த­போ­திலும் குறித்த இரா­ஜி­னாமா கடி­தத்தை அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய நிரா­க­ரித்­துள்ளார்.

மின்­துண்­டிப்பு கோளாறா ? நாச­காரச் செயலா?

பிய­கம உப மின்­நி­லை­யத்தில் ஏற்­பட்ட வெடிப்பு சம்­பவம் மற்றும் இதற்கு முன்னர் இடம்­பெற்ற மின்­துண்­டிப்­புக்கள் ஒரு­வே­ளை­களில் நாச­கார செய­லாக இருக்க கூடும் என சந்­தே­கின்­றனர். கிராமப் பகு­தி­களில் மின்­துண்­டிப்­பு­க­ளுக்கு சில நேரம் நாச­கார செயல் என்ற காரணம் பர­வ­லாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது பாரிய மின்­துண்­டிப்­பாகும். இது ஒரு­வேளை தொழில்­நுட்பக் கார­ண­மின்றி நாச­கார செய­லாக இருக்க முடியும். ஆனாலும் அர­சாங்கம் கூறி­ய­தற்­கான இதனை சதி என்று கூறி­விட முடி­யாது. இது அர­சாங்­கத்தின் மூடி மறைக்கும் தந்­தி­ர­மா­கவும் இருக்­க­கூடும். ஆனாலும் பொது­வாக சமூக வலை­த்­த­ளங்­களில் இளை­ஞர்கள் பலர் இதனை நாச­கார வேலை என்றே கூறி­யுள்­ளனர்.

பொலிஸ் முறைப்­பாடும் துரித விசா­ர­ணை­களும்

இந்­நி­லையில் தொடர் மின்­துண்­டிப்பு நாச­கார­மான செய­லாக இருக்கும் என்று கருதி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய திங்­கட்­கி­ழமை சப்­பு­கஸ்­கந்த பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இதற்­கான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பொலி­ஸாரும் இதனை நாச­கார செய­லாக இருக்­கலாம் என்றே சந்­தே­கின்­றனர். பொலிஸில் செய்­யப்­பட்ட முறைப்­பா­டு­க­ளு­காக விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை இது தொடர்பில் மூன்று குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. மேற்­படி குறித்த குழுக்­களின் அறிக்­கைகளை கூட்டு அறிக்­கை­யாக பெறு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. இதன்­பின்னர் அறிக்கை ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன் அறிக்கை எதிர்­வரும் 21 ஆம் திக­தி­யான திங்­க­ட்கிழமை அமைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு, 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது இது நாச­கார செயலா அல்­லது தொழில்­நுட்பக் கோளறா என்­பது நாட்டு மக்­க­ளுக்கு தெரி­ய­வரும்.

மின்­வி­நி­யோ­கத்­தினால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்பு

இதன்­படி இந்த விப­ரீ­தத்­தினை அடுத்து எரிந்து கொண்டிருந்த விளக்கு விழுந்து மேனியில் மண்னெண்ணெய் சித­றி­ தீ விபத்துக்குள்ளாகி பாண­ந்துறை கெசல்­வத்த பிர­தே­சத்தை சேர்ந்த 93 வய­து­டைய வய­தான பியட்ரஸ் குண­தி­லக என்ற பெண்­ணொ­ருவர் உயிரிந்துள்ளார். அத்துடன் காத்தான்குடி பிரதேசத்தின் வீடொன்றும் முழுமையாக தீயினால் பாதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நிரந்தரத் தீர்வு

இந்நிலையில் தொடர்ந்தும் ஏற்படுகின்ற மின்துண்டிப்புக்கான காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்காவிடின் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலட்சியமாக கருதப்படும் நவீன தொழில்நுட்ப யுகத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியாமல் போகும். இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமையுமெனில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று நுரைச்சோலை அனல் மின்நிலைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சீனா அரசாங்கத்துடன் இணைந்து புதிய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் மின்சாரத் துறையிலுள்ள குறைபாடுகளை தீர்க்க முடியாவிடின் நிதி கடனுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தேசம், மின்சாரத்தைக் கடனாக பெறவேண்டிய நிலைமை ஏற்படும். அப்படியாயின் நாட்டை எவராலும் முன்னேற்ற முடியாது போகும்.

 -எம்.எம்.மின்ஹாஜ்-