மாகாணசபை மன்மதனின் லீலைகள்-பாகம்-1
சீ.வி.கே சிவஞானம் அவர்களின் மருமகனும் அவரது உத்தியோகபூர்வ சாரதியின் எல்லைமீறிய செயற்பாடுகள் எமது செய்திப்பீடத்திற்கு சகல ஆதாரங் களுடனும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மாகாணசபையில் பலருடன் தொடர்பு நியாயம் கேட்டும் தீர்வுக்கு பதிலாக சிக்கல்களே தொடர்வதாக அறிய வருகின்றது.
இதில் குறித்த நபர் பெண்களை காதலிப்பதும் பின்னர் அவர்களை தனது பாலியல் தேவைகளுக்க பயன்படுத்திவிட்டு புதிய பெண்களை சீரழிப்பதுமாக அவரது செயற்பாடு தொடர்கிறது. இவரது தேவைகளுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றும் அவரது புதிய செம்மணிவீதியிலுள்ள வீட்டிற்கு அருகிலுள்ள வயோதிபர் ஒருவர் வசிக்கும் வீடும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளருக்க தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த செய்திகள் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு தகவல்களை திரட்டியபோது அதிர்ச்சியளிக்ககும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பல பெண்களை காதலிப்பதாக வும் உன்னையே திருமணம் முடிப்பதாகவும் தெரிவித்து பெண்களை விடுதிக்கு அழைத்து சென்று தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களை புகைப்படமும் காணொளியும் எடுத்துவைத்துக்கொள்வார் என்றும். அதனை காட்டியே தொடர்ந்தும் தனது செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு உனது சகல புகைப்படங்கள் காணொளிகள் என்னிடம் உண்டு அதனை வெளியிடுவேன் என மிரட்டி அவர்களை மீண்டும் தனது இச்சைக்கு இரையாக்கிவருகின்றார் என்று தெரிவித்த நல்லூர் பகுதி இளைஞர்கள் அவர் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட புகைப்படங்களையும் எமது செய்திப்பிரிவுக்கு வழங்கியிருக்கின்றனர்.(இவர் பெண்களுக்கு அனுப்பிய தடை செய்யப்பட்ட புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன அவை இங்கு தவிர்க்கப்படுகின்றது)
இவ்வாறாக நடைபெற்ற ஒரு சம்பவத்தில் தான் எடுத்துள்ள புகைப்படங்கள் காணொளிகளை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார் இவ்வாறு தான் காதலிப்பதாக கூறி ஒருபெண்ணை அவைத்தலைவர் சிவஞானத்திற்கு ஒதுக்கப்பட்ட மாகாணசபை வாகனத்திலேலே பல இடங்களுக்கு இவர் கூட்டிச் சென்றிருக்கின்றார் என்றும் இது அவரது வீட்டாரின் ஒத்துழைப்புடனும்தான் இவை நடைபெற்றதாகவும் அவரது நட்புவட்டத்திலிருந்து அறிய வருகின்றது.
இவரது நண்பரால் நடாத்தப்பட்டுவரும் Swarkka விடுதியும் இவரது அயலிலுள்ள வயோதிபரின் வீடு ஒன்றும் இந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதும் அறியவருவதோடு அந்த வீடு தொடர்பான விபரங்கள் அந்த பகுதி கிராம சேவகருக்கு தெரியும் என்றும் கூறப்படுகின்றது. அந்த விடுதியில் கடமையிலுள்ள ஒருவருடன் உரையாடியபோது குறித்த நபர் யாரை எப்போது கூட்டிவருவார் என்பது தெரியாது ஆனால் அவர் அடிக்கடி வந்துபோவார் என்றுமட்டும் சொல்லிவிட்டு தப்பிவிட்டார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டபெண் சீ.வி.கே.சிவஞானத்திடம் நீதி கேட்டு சென்றதாகவும் ஆனால் அதற்கு அவர் மூன்று இலட்சம் ரூபா பணம் தருவார் அதனை பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்யுமாறும் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏனைய உறுப்பினர் சிலரூடாகவும் உதவிகோரப்பட்டிருக்கிறது ஆனால் அந்த பெடியனின் பின்னணி தெரியாமல் கதைக்கிறிங்கள் பேசாமல் ஒதுங்கி செல்வது உங்களுக்கு நல்லது என அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனையும் தாண்டி உதவி கோரிசென்ற வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் நீ அந்த பெடியனுடன் தொடர்பு வைத்திருந்தாய்தானே எனவே நீ என்னுடனும் ஒத்துழைப்பு தந்தால் தான் உதவுவதாக தெரிவித்திருக்கின்றார் அவர் இவ்வாறு தெரிவித்த குறும்செய்தி பதிவும் செய்திப்பிரிவுக்கு கிடைத்திருக்கின்றது.
மகிந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விடுதிக் கலாச்சாரம் அண்மைய நல்லாட்சி அரசிலும் மிகவருமானம் தரும் தொழிலாக இருப்பதோடு வடக்கினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் வழிமாறிப்போவதற்கு மிகவும் வழிசமைக்கும் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் விடுதி நடத்துபவர்கள் அங்கு வருபவர்களை இரகசியமாக புகைப்படம் மற்றும் காணொளிப்பதிவு செய்வதற்குரிய ஒழுங்குகளையும் அவர்களே செய்து வைத்திருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இனியாவது வடமாகாணசபை விரைந்து இதுதொடர்பில் நடாத்தப்படும் விடுதிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தொடர்புடைய செய்தி
அவுஸ்ரேலிய அகதிமுகாமில் மன்மதலீலை-தமிழ் அதிகாரி பணிநீக்கம்!!
தொடர்புடைய செய்தி
அவுஸ்ரேலிய அகதிமுகாமில் மன்மதலீலை-தமிழ் அதிகாரி பணிநீக்கம்!!








